ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அயன் மற்றும் ஆரவ் என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார்.
பின் செப்டம்பர் 24ம் தேதி ஈ.சி.ஆர் சாலையில் ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தற்போது சென்னையை விட்டு மும்பையில் இப்போது செட்டில் ஆகியுள்ளார்.
தந்தை பேட்டி
இந்த நிலையில் ஜெயம் ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான மோகன் ராஜா ஒரு பேட்டியில் தனது மகன்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் உடம்பு சரியில்லாத நேரத்தில் தான் ஜெய்ம ரவி பிறந்தான், அவர் பிறந்த அடுத்த நாளே என்னுடைய உடலில் மாற்றம் தெரிந்தது. பள்ளியில் அவனை ஹீரோ போல நடத்தினார்கள், எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஜெயம் ரவி இல்லாமல் இருக்க மாட்டான்.
பரதநாட்டியம் 12 வயதில் ஒரு அரங்கேற்றம் நடத்தினேன், அதன்பின் பரதநாட்டிய கிளாசை நிறுத்திவிட்டேன், அதன்பிறகு தொடங்கினால் நடைமாறி விடும் என்பதால் நிறுத்திவிட்டேன்.
பம்பாயில் ஒரு கல்லூரியில் நடிப்பு முடித்தவர் எல்லா மொழிகளிலும் படங்கள் நடிக்கும் நடிகராக இருக்கிறார். தன்னுடைய மகன் ஜெயம் ரவி வளர்ந்த போது ராஜா மாதிரி இருந்தான் என பேசியிருக்கிறார்.