முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் மன்னிப்பு கோரலுக்கு பதிலளித்த ஜயம்பதி விக்ரமரத்ன

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் போது, ​​ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், குறித்த பதவிக் காலத்தினை அதிகரிக்க கூடிய 6 வருட அதிகபட்ச மாற்றத்தை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படாமைக்கான காரணம் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் என்பதால் ஆகும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன (Jayampathy Wickramaratne) தெரிவித்துள்ளார்.

காலியில் (Galle) நேற்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் 19 ஆவது அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் கருத்துக்கு ஜயம்பதி விக்ரமரத்ன இன்று (20) ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்திருந்தார்.

19ஆவது திருத்தம்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் மன்னிப்பு கோரலுக்கு பதிலளித்த ஜயம்பதி விக்ரமரத்ன | Jayampathy S Response To The President S Apology

அத்துடன் சட்ட வரைவுத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜயம்பதி விக்ரமரத்னவும் இதில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), “19வது அரசியலமைப்புச் சட்டத்தின் 83வது சரத்தை திருத்தத் தவறியமை, அனுபவமின்மையால் ஜயம்பதி விக்ரமரத்ன செய்த பிழையாகும்“ என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் சட்டத்தரணி இன்று (20) ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தயாரிக்கும் நடவடிக்கையை எந்தவித சர்வஜன வாக்கெடுப்பும் இன்றி முன்னெடுக்க அப்போதைய அரசாங்கம் தீர்மானித்திருந்ததாக ஜயம்பதி விக்ரமரத்ன தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்நீதிமன்றில் சவால்

திருத்தச் செயற்பாட்டின் போது தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு வரைவும் அமைச்சரவை உப குழுவுடன் கலந்துரையாடப்பட்டதுடன்,
உப குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இறுதி வரைவை சட்ட வரைவுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் ஜயம்பதி விக்ரமரத்ன தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் மன்னிப்பு கோரலுக்கு பதிலளித்த ஜயம்பதி விக்ரமரத்ன | Jayampathy S Response To The President S Apology

அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபரை பல தடவைகள் அழைத்து இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டின் காரணமாக சட்டமூலத்தில் பல மாற்றங்களைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 19வது திருத்தச் சட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போது, ​​அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டமா அதிபர், எந்தவொரு விதிமுறைகளுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்ததாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.