சிவா மனசுல சக்தி
ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் ஆகியோர் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் சிவா மனசுல சக்தி. SMS என அந்த படத்தை ரசிகர்கள் சுருக்கமாக அழைத்தனர்.
நடிகர் பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்.. யார் யார் தெரியுமா?
ஓபன் டாக்
இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் குறித்து ஜீவா பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” ஆரம்பத்தில், ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. ஒருவித வேண்டா வெறுப்புடன் தான் கதையைக் கேட்டேன்.
ஆனால் கதை கேட்ட பின் படம் நன்றாக அமையும் என்று நினைத்து நடித்தேன். அது போன்று மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.