அமெரிக்க (United States) ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை (Benjamin Netanyahu) சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, வொஷிங்டனில் (Washington) வைத்து பைடனை சந்திக்கலாம் எனவும், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் பைடனின் உடல்நிலையை பொருத்தே இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படும் என்றும் வெள்ளை மாளிகை (The White House) தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் நேதன்யாகு வொஷிங்டன் நகரில் இருக்கும் போது.இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனினும், தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக கூறிவிட முடியாது.
கோவிட் பாதிப்பு
பைடனின் உடல்நிலை சரியாக வேண்டும். அவருக்கு கோவிட் பாதிப்பு குணமடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் பட்சத்தில் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் குறித்த ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக பைடன் ஹமாஸ் (Hamas) உடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.