கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முற்பட்டதுடன் அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவமானது ஏ9 வீதி ரெலிக்கொம் முன்பாக நேற்று (26) மாலை இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், “அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு நிற வானில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வானுக்குள் ஏற்றி கடத்த முயன்ற நிலையில் நான் தப்பிக்க முயன்ற போது என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த வானை செலுத்திய சாரதியை தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக குடிநீர் அலுவலகத்தில் குடிநீர் கட்டண பிரச்சினை குறித்து அலுவலக பொறுப்பதிகாரியுடன் முரண்பட்டு விட்டு சென்றார்.
இதையடுத்து, சிறிது நேரத்திலேயே என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதனை அவர் அலுவலக அதிகாரிகளுடன் கதைத்து இருக்க வேண்டும் என் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
https://www.youtube.com/embed/sO9FLJJ5v4k?start=1