2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை 09 ஊடவியலாளர்கள் கடத்தல் மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்
இன்று (22.10.2025) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் முஜுபுர் ரஹ்மான் எம்.பி கேட்ட கேள்விக்கு பதலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல்
தொடர்ந்துரையாற்றி அமைச்சர்,
“2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு எட்டு பேர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பிரகீத் பண்டார எக்னலி கொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

அது தொடர்பான வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
மகிந்த ஆர்யவன்ச, சுப்ரமணியம் பாஸ்கரன், தனுஸ்க சம்பத் செனவிரத்தன, ரபாயிடீன் பாருக் முகமட் சுயல் ,சமில ஜனித் குமார ஏக்கநாயக்க, அசங்க கிரிசாந்த பாலசூரிய, தினேஸ் உபேந்திர, இந்துனில் சிசிர விஜேநாயக்க ஆகியோர் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள் ஆவர். இந்த சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு சில வழக்குகள் சமாதானமாக தீர்க்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

