முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!

மட்டக்களப்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மநுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு நேற்று (01) மாலை ஆறு மணியளவில் பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பெயர் விபரங்கள் 

இந்தநிலையில் வருகை தரும் நிகழ்வில் செய்தி சேகரிப்பு பணியில்
ஈடுபடுமாறு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களினால் முன்பே அப்பகுதி
ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் பெயர்
விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், ஊடகவியலாளர்கள் மாலை நான்கு மணியளவில் பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்! | Journalists Denied Access During Pm Visit

இதன்போது, அங்கு கடமையிலிருந்த பிரதமரின்
பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என
ஊடவியலாளர்களை அனுமதித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், பிரதமரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் தொலை பேசி இலக்கங்களை
வழங்கி அவரிடம் அனுமதி பெற்று விட்டு உள்ளே செல்லலாம் என அங்கிருந்த பாதுகாப்பு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் 

இதனடிப்படையில், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் குறித்த
தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டதற்கிணங்க அவர் உரிய இடத்திற்கு வந்ததும்
அனுமதி பெற்றுத் தரலாம் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு அங்கு செய்தி சேகரிப்புக்கு அனுமதி
மறுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்! | Journalists Denied Access During Pm Visit

இது இவ்வாறு இருக்க அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த
உத்தியோகஸ்த்தர்கள் அங்கிருந்த ஊடகவியலார்களை முறையாக வழிநடாத்தவில்லை என ஊடகவியலார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, ஏனைய ஊடகவியலார்களை அவ்விடத்தில் நிற்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்ததாகவும் அங்கிருந்த ஊடகவியலார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாதம் 

இந்தநிலையில். குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின்
அமைப்பாளர்கள் ஊடகவியலாளர்களை அவமதித்துள்ளார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் பயங்கரவாதம் இல்லை மற்றும் தமது அரசாங்க அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விடயத்தில் ஊடகவியலார்கள் அவமதித்துள்ளதாக
ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுவில் பிரதமரின் பாடசாலை நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்! | Journalists Denied Access During Pm Visit

இவ்வாறு ஊடகவியலார்களை அவமதித்ததானது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமருக்கு தெரியாமலிருந்திருக்கலாம் எனவே இது நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனிமேல்
இவ்வாறு ஊடகவியலாளர்களை அவமதிக்கும் செயல் நாட்டில்
இடம்பெறக்கூடாது எனவும் ஊடகவியலார்கள் தமது ஆதங்கத்தைத் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.