ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று மௌனம் பேசியதே. இந்த சீரியல் தொடங்கி மூன்று மாதம் கூட இன்னும் ஆகவில்லை.
பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் தான் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் அவர் தற்போது சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
அதிர்ச்சி காரணம்
தான் விலகியது ஏன் என்கிற காரணத்தை அவர் ஒரு பெரிய அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். “ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை தரவில்லை.”
“மிகவும் சுயநலமான, நமது கலாச்சாரத்திற்கே எதிரான ரோல் போல அது இருக்கிறது. இதில் நடிப்பது எனக்கு சரி என தோன்றவில்லை. கடந்த பல மாதங்களாக நான் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன், ஷூட்டிங்கும் toxic ஆக மாறிக்கொண்டிருக்கிறது.”
“வாழ்க்கை என்பது நேர்மை மற்றும் சுயமரியாதை உடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதை கடைபிடிக்க நான் அதிகம் முயற்சித்தாலும் முடியவில்லை. அதனால் நான் மௌனம் பேசியதே தொடரில் இருந்து விலகுகிறேன். நிச்சயம் இன்னொரு ப்ராஜெக்ட்டில் சந்திக்கிறேன்” என அவர் கூறி இருக்கிறார்.
View this post on Instagram