செம்மணியில் புதையுண்டவர்களுக்கு
நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் உருவாகாத
சமூதாயத்தை. உருவாக்க வேண்டும் அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
செய்கின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கடல்வள அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள்
மேலும் தெரிவிக்ககையில், உலகத்தில் இன்று மனித உரிமையை மீறுகின்றவர்கள் யார் என்பது மக்களுக்கு
நன்றாக தெரியும்.

யுத்தம் முடிந்து
16வருடங்கள் ஆகின்றது இனியும் இப்படியான யுத்தம்
ஏற்படக்கூடாது. இனிமேலும் இசைப்பிரியாக்கள், கிருசாந்திகள் ,கோணேஸ்வரிகள்
உருவாகக்கூடாது.
மனித உரிமை மீறல்கள் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை தமிழ்
இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள
இளைஞர்களும் இதே விதத்தில் அடித்து நொருக்கி ஆறுகளில் பிணங்கள் மிதந்த வரலாறு
உள்ளது.
நாங்கள் சொல்கின்றோம் செம்மணியில் புதையுண்டவர்களுக்கு
நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் உருவாகாத
சமூதாயத்தை. உருவாக்க வேண்டும் அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
செய்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.




