முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை நிராகரிக்கும் ஜே.வி.பி! உறுதிப்படுத்திய அனுரகுமார

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நிராகரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கருத்து வெளியிட்டுள்ளார்.   

யாழ்ப்பாணத்துக்கு (Jaffna) பயணம் செய்துள்ள அனுரகுமார திசாநாயக்கவிடம், சமஷ்டி தீர்வு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்க மறுத்த அனுரகுமார திசாநாயக்க, அதனை நிராகரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.

தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் இன்று (11) யாழ்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை நிராகரிக்கும் ஜே.வி.பி! உறுதிப்படுத்திய அனுரகுமார | Jvp Rejects Collective Solution For Tamils Anura

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையாது: இடித்துரைத்த சுமந்திரன்

தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையாது: இடித்துரைத்த சுமந்திரன்

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஒரு தனி கட்சியாக இன்றி அனைவருடனும் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

இதன்போது, சமஷ்டி தீர்வு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதையடுத்து, அதனை நிராகரிக்கும் வகையில் அனுரகுமார திசாநாயக்க பதிலளித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தி தலைவர்

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண எம் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்றத்தை அமைக்க திட்டம்: பகிரங்கமாக அறிவித்த திலித் ஜயவீர

புதிய நாடாளுமன்றத்தை அமைக்க திட்டம்: பகிரங்கமாக அறிவித்த திலித் ஜயவீர

மாறாக ஒரு அரசியல் கட்சி இது தான் தீர்வு என கூற முடியாது. அணைத்து தரப்பினருடனும் முன்னெடுக்கப்படும் பேச்சுக்களின் பின்னரே எம்மால் இறுதி தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும்.

ஏனைய அரசியல் கட்சிகள் 13 ஆம் திருத்தத்தின் நடைமுறை தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகிறார்கள். இவ்வாறாக கருத்து வெளியிட்ட தரப்பினர் கடந்த காலங்களில் ஆட்சியையும் செய்திருக்கிறார்கள்.

எனினும், எதனையும் யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. நாம் அவ்வாறு இல்லை, எமது ஆட்சியில் நாம் கூறுவது நடக்கும்” என தெரிவித்தார். 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை: சட்ட நடவடிக்கையை கோரும் செந்தில் தொண்டமான்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை: சட்ட நடவடிக்கையை கோரும் செந்தில் தொண்டமான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/Ev3W_GAo3Gk?start=185

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.