நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். படங்கள், வெப் சீரிஸ் என ஜோதிகா பிசியாக அங்கு நடித்து வருகிறார்.
தற்போது டப்பா கார்டெல் என்ற தொடரில் அவர் நடித்து இருக்கிறார். அது விரைவில் ரிலீஸ் ஆகும் நிலையில், ஜோதிகா அதை ப்ரோமோஷன் செய்ய இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சூர்யாவை விமர்சித்தவருக்கு பதிலடி
இன்ஸ்டாவில் ஜோதிகாவின் பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த நபர் ஒருவர், ‘விஜய் தான் உங்க கணவரை விட சிறந்தவர்’ என கூறி இருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுத்த ஜோதிகா ஒரு எமோஜியை மட்டும் பதிலடியாக கொடுத்து இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.