தமிழ் சினிமா ரசிகர்களை உலுக்கும் வகையில் சமீபத்தில் நேர்ந்த ஒரு விஷயம் மனோஜ் பாரதிராஜா அவர்களின் மரணம்.
நன்றாக இருந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பில் இருந்தே பலர் மீண்டு வராத நிலையில் ஒரு இயக்குனரின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் நாகேந்திரன். 2015ம் ஆண்டு உண்மை கதையை மையமாக வைத்து ஆக்ஷன் கதைக்களத்தில் இவர் காவல் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
விமல் கதாநாயகனாக நடித்த இப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை எனலாம்.
இந்த நிலையில் இயக்குனர் நாகேந்திரன் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாகேந்திரன் மறைவு குறித்து சுரேஷ் காமாட்சி ஒரு சோகமான பதிவும் போட்டுள்ளார்.