இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சொந்தமான கச்சதீவானது, இங்குள்ள 2 கோடி மக்களின் இறைமை எனவும் அதனை எவராலும் மீளப்பறிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு தாரைவார்ப்பு
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது முதல், கடற்றொழிலாளர்களின் கைதுகள் அதிகரித்து வருவதாகவும், கச்சதீவு தாரைவார்ப்பு தொடர்பான தீர்மானம் தவறானது எனவும் பொருள்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போது, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்ட கருத்துக்களை கூறியுள்ளார்.
அத்தோடு, இலங்கை கடல் பகுதியில் தமிழக கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் அழிவுகளால், சுமார் 15 ஆண்டுகளில் நமது கடல்கள் தவிர்க்க முடியாமல் கடல் பாலைவனமாக மாறும் என்றும் அவர் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.