நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நிலையில் 2020ல் அவரது காதலர் கௌதம் கிச்லுவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. காஜல் அகர்வால் குழந்தை பெற்ற பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அவரது காட்சிகள் எதுவும் இந்தியன் 2ல் வரவில்லை. 3ம் பாகத்தில் தான் அவை வரும் என தெரிவிக்கப்பட்டது.
ஒல்லியான காஜல்
தற்போது காஜல் அகர்வால் தான் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
“இது எளிதாக எல்லாம் இல்லை. மிகவும் frustration மற்றும் அதிகம் சோர்வு எப்போதும் இருந்தது” என கூறி இருக்கும் அவர் சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இதோ.