நடிகர் கலையரசன் அட்டகத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவரை வாழை படத்தில் பார்த்திருப்பீர்கள்.
குணச்சித்திர வேடத்தில் எல்லோரது கவனம் ஈர்க்கும் முக்கிய நடிகர்களில் ஒருவராக கலையரசன் கோலிவுட்டில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன அமரன் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறிய விமர்சனம் பற்றி கலையரசன் தற்போது ட்விட் செய்திருக்கிறார்.

ப்ளூ சட்டைக்கு கண்டனம்
“ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை! முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது!.”
இவ்வாறு கலையரசன் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை!
முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது!#Amaran#Amaranreview #Reviews#Bluesattaimaran…— Kalaiyarasan (@KalaiActor) November 2, 2024

