குடும்பஸ்தன்
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்துள்ளது குடும்பஸ்தன் திரைப்படம். அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் கதாநாயகியாக அறிமுக நடிகை சான்வி மேகனா நடிக்க, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி 24ம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா
பாராட்டிய கமல் ஹாசன்
உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வந்த குடும்பஸ்தன் படத்தை கமல் ஹாசன் சமீபத்தில் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மணிகண்டன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார். தனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் மணிகண்டன் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..