அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பைடனுக்கு(biden) பதிலாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்(kamala harris) குறித்த பிரபலமான மீம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடந்த ஹிஸ்பானிக் அமெரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ்,
நேராக பூமியில் விழுந்தவர்கள்
‘எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவர் கேட்பதுண்டு’ என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸ் தென்னை மர மீம்ஸ்
அவர் பேசியது அப்போது வைரல் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் தென்னை மர மீம்ஸ்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.
“You think you just fell out of a coconut tree? You exist in the context of all in which you live and what came before you” – Kamala Harris (2023)pic.twitter.com/GiTVhDNvRd https://t.co/SXmwKAKhke
— Fiona Small (@FionaSmall) May 17, 2024
தற்போது கமலா ஜனாதிபதி வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீம்ஸ்களை பிரச்சார ஆயுதமாக்கியுள்ளனர்.
Madam Vice President, we are ready to help. pic.twitter.com/y8baSx44FL
— Brian Schatz (@brianschatz) July 22, 2024
Coconut tree summer pic.twitter.com/6w1wLpkbNX
— Chi Ossé (@OsseChi) July 3, 2024