நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுன்றி மற்ற ஹீரோ படங்களையும் அந்த நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு மோசடி நடந்து வருவதாக தற்போது எச்சரிக்கை அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக சிலர் மோசடி செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹீரோ ஆகும் VJ சித்து.. இயக்குனர் யார் தெரியுமா?
எச்சரிக்கை
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எத்த வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
pic.twitter.com/jGa3JGKjkI
— Raaj Kamal Films International (@RKFI) March 29, 2025