ரஜினி உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கொடுத்திருக்கும் exclusive பேட்டி இதோ.
முத்து படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணனை போடலாம் என இயக்குனர் சொல்ல, ரஜினி வேண்டாம் என சொன்னாராம். அதன் பின் கனல் கண்ணன் நேரில் சென்று பேசும்போது, அவரின் நம்பிக்கையான பேச்சை பார்த்து உடனே அவர் தான் ஸ்டண்ட் மாஸ்டர் என சொல்லிவிட்டாராம்.

கேவலமா இருக்கும் என சொன்னேன்
படையப்பா படத்தில் ஒரு காட்சியில் bare bodyல் சண்டை காட்சி நடிக்க வேண்டும் என ரஜினி சொல்ல, ‘கேவலமா இருக்கும்’ என அவரிடம் சொன்னாராம் கனல் கண்ணன்.
அங்கிருந்து எழுந்து சென்ற ரஜினி, 5 நிமிடம் கழித்து வந்து தனது உடலை காட்டி சின்ன வயதில் இருந்து மூட்டை தூக்கிய உடம்பு என காட்டினாராம். அதற்கு பிறகு தான் அந்த காட்சியை எடுத்தார்களாம்.
View this post on Instagram
ரஜினி ஒல்லியான உடல் கொண்டவர் என்பதால் தான் அப்படி சொன்னதாக கனல் கண்ணன் கூறி இருக்கிறார்.
கனல் கண்ணன் முழு பேட்டி இதோ.

