முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹரிணியின் கூற்றுக்கு மறுப்பு வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் சகா

Courtesy: Sivaa Mayuri

அரச துறையினருக்கான சம்பள உயர்வு தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த தகவல் பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

மாறாக, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அங்கீகரிக்க ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக காஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அரச துறை மற்றும் சம்பள உயர்வுகளை மே 2024இல் மதிப்பீடு செய்வதற்கான குழு ஒன்றின் நியமனத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அரச துறைப் பிரச்சினைகள்

அத்துடன் திறைசேரி, முகாமைத்துவ சேவைகள் மற்றும் ஏனைய தேவையான பங்குதாரர்களின் அதிகாரிகளை இந்தக் குழு உள்ளடக்கியிருந்தது.

ஹரிணியின் கூற்றுக்கு மறுப்பு வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் சகா | Kanchana Has Denied Harini S Claim

இந்தக் குழு, தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களை சந்தித்து அரச துறைப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.

இதனையடுத்து, குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒகஸ்ட் 2024 இல் அங்கீகரிக்கப்பட்டது என்று விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானம் 

இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் இந்த பரிந்துரைகளை இணைத்து தேவையான நிதியை ஒதுக்குவதற்கு 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹரிணியின் கூற்றுக்கு மறுப்பு வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் சகா | Kanchana Has Denied Harini S Claim

எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவித்திருந்தார்.

இருந்த போதிலும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.