முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காரைதீவு பிரதேச சபையின் அமர்வு

காரைதீவு பிரதேச
சபையின் நான்காவது ஆவது சபையின் முதலாவது மாதாந்த சபைக்கூட்டம் இன்று(16)
ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி சபையின்
தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர்
தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும்
உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.

தவிசாளரின் அறிவிப்புக்கள்

பின்னர் காரைதீவு பிரதேச சபைக்கு
சொந்தமான கடற்கரை பூங்காவின் கடையறையினை காரைதீவு பிரதேச செயலாளர் வேண்டுகோளிற்கிணங்க உள்ளூர் உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் விற்பனை நிலையமாக
பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக வழங்கப்படுகின்றது தொடர்பில் சபையில்
கலந்துரையாடப்பட்டன.

காரைதீவு பிரதேச சபையின் அமர்வு | Karaitivu Pradeshiya Sabha Session

மேலும் சபையில் தவிசாளரின் அறிவிப்புக்கள், பிரேரணைகளை
ஆராய்ந்து நிறைவேற்றுதல், செயலாளர் நியமனம்-தற்போதைய செயலாளரான
திரு.அ.சுந்தரகுமார் என்பவரை தொடர்ந்தும் செயலாளராக கடமையாற்ற சபை அனுமதி
பெறல்,காசோலையில் கையொப்பமிடல் அலுவலக காசோலையில் இரு உத்தியோகத்தர்கள்
கையொப்பமிட வேண்டுமென்பதால் தற்போது இடுவதற்கு சபை அனுமதி பெறல்,நிதிப்பிரமாண
அதிகார கையளிப்பின் பிரகாரம் கொடுப்பனவு அத்தாட்சிப்படுத்தும் கடமையினை
செயலாளரும், கொடுப்பனவு உத்தியோகத்தராக நிதி உதவியாளரையும் நியமிக்க
அங்கீகாரம் வழங்க சபை அனுமதி பெறல்,கலாச்சார மண்டபத்திற்கான தற்போதைய வாடகையை
தொடர்ந்தும் அறவீடு செய்ய சபை அனுமதி பெறல் ,2025 ற்கான கேள்விச் சபையில்
பின்வருபவர்களை கேள்விச்சபை உறுப்பினர்களாக நியமிப்பதற்கு சபை அனுமதி
பெறல்,குறித்தும் ஆராயப்பட்டன.

சபை நடவடிக்கை

இறுதியாக 2025இற்கான தொழில் நுட்ப மதிப்பீட்டுக்
குழுவில் பின்வருபவர்களை கேள்விச்சபை உறுப்பினர்களாக நியமிப்பதற்கு சபை அனுமதி
பெறல், காரைதீவு பிரதேச சபையின் 4ஆவது சபையின் சபை அமர்வுகளை 2025ஆம் ஆண்டில்
மாதாந்தம் 2ஆம் வாரத்தில் குறித்த தினத்தில் நடாத்துவதற்கு சபை அனுமதி
பெறல்,2025 ஆண்டுக்கான நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற வேலைத்திட்டங்களுக்கான
சபை அனுமதி பெறல்,எமது சபைக்கான 2025ம் ஆண்டில் செலுத்தப்படும் மின்சார
கட்டணம், தொலைபேசி இணைய கட்டணம், நீர் வழங்கல் கட்டணம் போன்ற மீண்டுவரும்
செலவினங்களை மாதாந்தம் தொடர்ந்து செலுத்துவதற்கான சபை அனுமதி பெறல்,தற்பொழுது
சபையில் நடைமுறையிலுள்ள திண்மக்கழிவு சேகரிப்பிற்காக அறவிடப்படும் கட்டணத்தினை
தொடர்ந்து அறவீடு செய்வதற்கு சபை அனுமதி பெறல்,2025ம் ஆண்டுக்கான நிலையியற்
குழுக்கள் அமைப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளல்,2025 ஆண்டுக்கான ஆலோசனை
குழு அமைப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் அமர்வு | Karaitivu Pradeshiya Sabha Session

அத்தோடு, காரைதீவு லெனின் வீதியில் இரு
இடங்களில் திண்மக்கழிவுகள் இனந்தெரியாத நபர்களினால் கொட்டப்பட்டுவருவதனால்
அதனை தடுக்கும் முக முகமாக அலுவலகம், சித்தானைக்குட்டி ஆலயம் இரு இடங்களிலும்
கண்காணிப்பு செய்யும் வகையில் கமரா (Camera) பொருத்துவதற்கும் ஏனைய குப்பை
கொட்டப்படும் இடங்களில் (Board) அமைப்பதற்கும் சபை அனுமதி பெறல்,காரைதீவு
பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதி, களப்பு வீதி, கடற்கரை வீதி மற்றும் மயானம்
போன்ற இடங்களில் PDSG நிதியில் கொள்வனவு செய்யப்படும் மின்விளக்குகளை
பொருத்துவதற்கு சபை அனுமதி பெறல்,சபையினால் வேலைத்திட்டங்கள்
முடிவுறுத்தப்பட்டதனை முன்னெடுக்கப்படுகின்ற உறுதிப்படுத்தும்
“ஏற்றுக்கொள்ளும் குழு” Acceptance Committee யினை சபையில் பின்வருபவர்களை
உறுப்பினர்களாக நியமிப்பதற்கு சபை அனுமதி பெறல்,மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய
திகதி தீர்மானித்தல்,முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில்
கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக
நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.