ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் ராம் சரண் ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடித்து இருந்தனர்.
படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது, ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் கதையை ஷங்கர் மாற்றிவிட்டார்
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் கேம் சேஞ்சர் தோல்வி பற்றி பேசி இருக்கிறார்.
“நான் சொன்ன கதையில் ஒரு grounded ஆன IAS அதிகாரி என தான் கதை சொன்னேன். அதன் பிறகு பல எழுத்தாளர்கள் உள்ளே வந்தார்கள். கதை, திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது” என அவர் கூறி இருக்கிறார்.