கருணா (Karuna Amman), மற்றும் பிள்ளையான் (Pillayan) ஆகியோர் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்தவர்கள் தான் கருணா மற்றும் பிள்ளையான்.
அரசியலில் பதவிகள்
இவ்வாறு குற்றம் இழைத்தவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும். பிள்ளையான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்.அப்படிபட்ட ஒருவருக்கு எப்படி பதவி வழங்கப்பட்டது.
அவ்வாறு பதவி வழங்கப்பட்டமை தவறாகும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி கருணாவும், பிள்ளையானும் இராணுவத்துடன் இணைந்தனர். போரை முடிப்பதற்கு இது உதவியாக அமைந்திருக்கக்கூடும்.
அம்பாறையில் பிக்குகளைக் கொலை செய்தது யார்? இது அனைவருக்கும் தெரியும்.
மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்று குற்றம் இழைத்தவர்கள்”என தெரிவித்தார்.
you may like this
https://www.youtube.com/embed/4MD8f_kaYeAhttps://www.youtube.com/embed/lLApn3mL22I