கடந்த காலங்களில் பல குற்ற செயல்களில் ஈடுபட்ட முன்னாள் அரசியல்வாதிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாரிய ஆபத்தொன்றை ஏற்படுத்த முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் என்று சொல்லப்படும் அஜித் தரமபால என்ற நபர் இந்த தகவலை காணொளி ஒன்றின் ஊடாக வெளியிட்டிருக்கின்றார்.
கருணா அம்மானின் குழுவினரை பயன்படுத்தி இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிரான ஒரு செயலை செய்வதற்கு சிலர் துணிந்துள்ளதாக தகவல்கள் சில கசிந்துள்ளதாக குறித்த நபர் கூறியிருக்கின்றார்.
கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் ஓகஸ்ட் மாதமளவில் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய நபர் என்று தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த தமிழர் மட்டக்களப்பில் இருந்து மூவருடன் கொழும்புக்கு வந்த நிலையில் வந்த பதிவுகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி,


