நடிகர் விஜய் தற்போது அரசியலில் நுழைந்து இருக்கும் நிலையில் மேடையில் பேசும்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு என இரண்டையும் விமர்சித்து வருகிறார்.
பாசிசம், பாயசம் என இரண்டையும் அவர் விமர்சித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் கருணாஸ் மேடையில் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார்.
விஜய்யை தாக்கிய கருணாஸ்
“பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம்” என விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார் கருணாஸ்.
“பாதரசம் யாருடனும் ஒட்டாது. அது மக்களுடனும் ஒட்டாது” என குறிப்பிட்டு இருக்கிறார் கருணாஸ்.