இலங்கையில் மூன்று தசாப்த கால பிரிவினைவாத பயங்கரவாத மோதலைத் தாங்கிக் கொண்டவன் என்ற வகையில், வன்முறை ஒருபோதும் ஒரு தீர்வாகாது, அது வலியையும் இழப்பையும் மட்டுமே நிலைநிறுத்தும் என இந்திய பிரதமர் மோடிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து மோடிக்கு எழுதிய கடிதத்தில் ரணில் இவ்வாறு கூறியுள்ளார்
அதில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து தான் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தின் தாக்கம்
“இந்தக் கொடூரமான குற்றத்தை கடுமையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உங்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், குறிப்பாக துயரமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.”என மோடிக்கு எழுதிய கடித்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த குற்றச் செயல், தீவிரவாதத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தெளிவாக நினைவூட்டுகிறதாகவும் இது ஒருங்கிணைந்து கவனிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

