நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் திசைதிருப்பவே அரசாங்கம் போதையொழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
பொதுமக்களுக்கு எந்தவொரு நலன்புரித் திட்டங்களையோ, வேறு செயற்திட்டங்களையோ முன்னெடுக்கவும் இல்லை.
கவனத்தை திசைதிருப்பும் செயற்பாடு
அவ்வாறான நிலையில் பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கை என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.