நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது காதலர் ஆண்டனியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கோவாவில் நடந்த அவர்கள் திருமணத்தில் தளபதி விஜய் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் திருமணம் முடித்து சில தினங்களிலேயே தனது ஹிந்தி படமான பேபி ஜான் ப்ரோமோஷனுக்காக வந்து விட்டார். அவர் கழுத்தில் தாலி உடன் மாடர்ன் உடையில் வந்திருந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.
தூங்கி வழிந்த கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் திருமணத்தன்று மேக்கப் போடும்போது கீர்த்தி சுரேஷ் தூங்கி வழிந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து வேலைகள் செய்ததால் அவர் இப்படி இருப்பதாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கூறி இருக்கிறார்.
View this post on Instagram