நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் பாலிவுட்டில் பேபி ஜான் படத்தின் மூலமாக நுழைந்தார். அந்த ஆனால் அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த படத்தை தயாரித்த அட்லீக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அடுத்து கீர்த்தி சுரேஷ் கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார். இந்நிலையில் அவரது அடுத்த படம் பற்றிய புது தகவல் வெளியாகி இருக்கிறது.
அசோக் செல்வன்
தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு சின்ன ஹீரோ படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் அடுத்து அசோக் செல்வன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். குட் நைட் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறதாம்.