சோமாலியாவின்(somalia) மொகடிஷு அருகே நடந்த விமான விபத்தில் கென்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சரக்கு விமானம், லோயர் ஜூபா பகுதியில் உள்ள டோப்லி நகரத்திலிருந்து ஆபிரிக்க யூனியன் படைகளுக்கு பொருட்களை விநியோகித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, மார்ச் 22 சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:43 மணியளவில் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை உறுதிப்படுத்திய விமான நிறுவனம்
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மொகடிஷுவிலிருந்து தென்மேற்கே சுமார் 24 கி.மீ தொலைவில் விமான விபத்து நிகழ்ந்ததாக சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (SCAA) உறுதிப்படுத்தியது.
❗️A Kenya-registered cargo aircraft crashed near Mogadishu in Somalia in the evening of Saturday, killing five people on board.
The five are said to be Kenya nationals. pic.twitter.com/zFMCUV1YOp
— Cyprian, Is Nyakundi (@C_NyaKundiH) March 23, 2025
“விமானத்தில் (POB) ஐந்து பேர் இருந்தனர், அவர்கள் அனைவரும் துயரகரமாக உயிரிழந்தனர். விமானம் தோப்லியில் (HCDB) இருந்து புறப்பட்டு ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திற்கு (HCMM) செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, விமானத்தில் 4 கென்ய நாட்டவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் இயந்திரக் கோளாறு
சரக்கு விமானம் தோப்லியில் இருந்தபோது சனிக்கிழமை இயந்திரக் கோளாறுகளை சந்தித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் சோமாலிலாந்து தரநிலையின்படி அது சரி செய்யப்பட்டதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன.
விபத்து பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் வழங்குவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான விசாரணையை நடத்துவதாக உறுதியளித்ததாகவும் சோமாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (SCAA) தெரிவித்துள்ளது.