கே.ஜி.எப்
2018ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் புதுப்புது சாதனைகளை படைக்க துவங்கியது.
ப்ரேமலு பட பிரபலத்தை நேரில் சந்தித்தது சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம்
இப்படத்தில் யாஷ் உடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ரவி பஸ்ரூர் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கே.ஜி.எப் 3
இரண்டாம் பாகத்தின் முடிவில் யாஷ் இறந்துபோவது போல் காட்டியிருந்தாலும், கே.ஜி.எப் மூன்றாம் பாகத்திற்காக லீட் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில், இயக்குனர் பிரஷாந்த் நீல் இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
அதன்படி “கே.ஜி.எப் 3 படம் நடக்கும். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் ஏற்கனவே எழுதிவிட்டேன். அப்படி மூன்றாம் பாகம் நடக்கவில்லை என்றால் கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் இறுதியில் 3ஆம் பாகம் குறித்து காட்சியை வைத்திருக்க மாட்டோம். அனைத்தையும் திட்டமிட்டு கே.ஜி.எப் 3 படப்பிடிப்பு துவங்கும்” என அவர் கூறியுள்ளார்.