இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் (America) முகத்தில் பலமாக அறைந்ததுள்ளது என ஈரானின் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Ali Khamenei) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாபெரும் ஈரானிய தேசத்துக்கு வாழ்த்துகள்.
மக்களுக்கு சில முக்கியமான வாழ்த்துகளை கூற விரும்புகிறேன், முதலில் பிழையான ஸியோனிச ஆட்சியை வென்றதற்கு வாழ்த்துக்கள்.
பிழையான ஆட்சி
அது என்ன கூச்சலிட்டாலும் என்ன கூறினாலும் இஸ்லாமிய குடியரசு கொடுத்த அடியில் ஸியோனிச ஆட்சி கிட்டத்தட்ட சரிந்துவிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி அசாதாரண வழிகளில் நிகழ்வுகளை மிகைப்படுத்தி தெரிவித்துள்ளார்.
அவருக்கு இந்த மிகைப்படுத்தல் தேவைப்பட்டதுடன் இந்த வார்த்தைகளைக் கேட்ட எவரும் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மற்றொரு உண்மை இருப்பதைப் புரிந்துகொண்டுள்ளனர்.
இஸ்லாமிய குடியரசு
அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர், அத்தோடு அவர்கள் விரும்பிய இலக்கை அடையவில்லை.

இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் பலமாக அறைந்தது.
அது, பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உடெய்ட் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியது” என அவர் தெரிவித்துள்ளார்.

