கிளிநொச்சி வட்டக்கச்சி ஐயப்பன் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
சித்திர தேர் வெள்ளோட்டம் நேற்று(11.01.2025) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தின் தேர்
திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில், அடியவர்களின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 31 அடி உயரம்
கொண்ட சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
புதிய சித்திரத்தேர்
நேற்று பகல் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சித்திர தேர் வெள்ளோட்டம்
நடைபெற்றுள்ளது. இதில் ஐயப்பன் ஆலய பக்தர்கள் சிவாச்சாரியார்கள் பக்தர்கள் என பலர் கலந்து
கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பழமை வாய்ந்த ஆலயமாக காணப்படுகின்ற
இவ்வாலயத்தின் புதிய சித்திரத்தேர் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.