கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் இளங்குமரன் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பளை பிரதேசத்தில் தென்பகுதி முதலீட்டாளர் ஒருவருக்கு காணி வழங்குவது தொடர்பாகவே இந்த கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.
முகம் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடு
இதன்போது கள்ளமண் வியாபாரம்,கசிப்பு வியாபாரம் போன்ற கூட்டத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களும் பேசப்பட்டன.
பல்வேறு உயர் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இவ்வாறு மலினத்தனமான வார்த்தைப் பிரயோகங்கள் செயற்படுத்தப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களை புறம் தள்ளும் செயற்பாடாக அமையுமென அங்கிருந்த பலரும் தெரிவித்தனர்.
https://www.youtube.com/embed/6VcXLtoKX8Y

