நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவதற்கு எதிராக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட AASL, எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் விடுவது அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்க விடுவதாக கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தண்டனைக்குரிய குற்றம்
அத்தோடு, சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் விடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று AASL சுட்டிக்காட்டியுள்ளது.

விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு மற்றும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எடுத்துரைத்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

