மருத்துவமனையில் யேசுதாஸ்..?
பின்னணி பாடகர் கே ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இன்று காலை தகவல் வெளிவந்தது.
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருதாகவும் தகவல் கூறப்பட்டது.
என் முதல் காதல், விலகி இருந்த காலம் முடிந்தது.. நடிகை சமந்தா அதிரடி
வெளிவந்த உண்மை
ஆனால், தற்போது யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல் உண்மையில்லை என்றும், அவர் அமெரிக்காவில் நலமுடன், ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் கே ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெளிவந்த தகவல் பொய் என தெரியவந்துள்ளது.