நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தற்போது pan India ஹீரோயினாக மாறி இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இந்திய அளவில் இருக்கிறது.
ராஷ்மிகா முதலில் கன்னட சினிமாவில் நடித்து பாப்புலர் ஆகி அதன் பின் தான் மற்ற மொழிகளில் நடித்து உச்சத்திற்கு சென்று இருக்கிறார். ஆனால் அவர் கர்நாடகாவையும் கன்னட மொழியையும் அவமதிப்பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ராஷ்மிகாவுக்கு பல முறை அழைப்பு சென்று இருக்கிறது. ஆனால் அவர் வர முடியாது என மறுத்துவிட்டாராம்.
இதனால் ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கன்னிகா பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் ராஷ்மிகாவை தாக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
சமந்தா புது காதலர் இவரா.. மீண்டும் ஒன்றாக இருக்கும் போட்டோ வைரல்
பாதுகாப்பு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
இந்நிலையில் ராஷ்மிகாவின் கொடவா சமூகத்தினர் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.
குடகு பகுதியின் பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து உழைப்பால் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டிருக்கின்றனர்.
மேலும் நிகழ்ச்சிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம், அதை வைத்து ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என சொல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளோருக்கு கண்டனமும் தெரிவித்து இருக்கின்றனர்.