ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க தயார் என கொரிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கக் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிதி உதவி
புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் தயார் என கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வழங்கப்படவுள்ள உதவிகளை தொடர்பிலும் அறிவித்துள்ளன.
இதேவேளை ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவும் வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.