பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திரா தொடர்பில் விமல் வீலவன்ச குறிப்பிட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரிக்காவின் காலத்தில் எப்படி லக்மன் கதிர்காமர்
இருந்தார் என்பது போல அநுரவிடம் அருண் கேமச்சந்திரா இருக்கிறார் என்ற ஒரு விமர்சனம் தமிழர்கள் சிலர் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில்
பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திரா புலிகளின் தொடர்பாளர் எனவும்
அவர் வல்வெட்டிதுறைக்கு பிரச்சாரக்கூட்டத்திற்கு சென்று புலிகளின் தலைவருக்கு சிலை வைப்பதாக கூறியதாகவும் ஒரு வன்மத்தை வெளிப்படுத்தி மேலும் பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
அதேவேளை வெள்ளைவேன்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் சுதந்திரமாக நடமாடியதாக ITJP குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் தொடர்பிலும் அதேபோல செம்மணி விவகாரத்தில் வெளிப்படும் மர்மங்கள் தொடர்பிலும் தமிழர்களை மீண்டும் காட்டிக்கொடுக்கப்போகிறாரா என்ற ஒரு கேள்விக்கான பதிலையும் தேடி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு….