சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்துடன் KPY பாலா ஹீரோவாக நடித்து இருக்கும் காந்தி கண்ணாடி படம் ரிலீஸ் ஆகிறது.
சிவகார்த்திகேயனுக்கு போட்டியா
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நீங்கள் போட்டியா என இன்று நடந்த பிரெஸ் மீட்டில் KPY பாலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த அவர், “அய்யய்யோ. அண்ணன் எவ்ளோ பெரிய ஆள். அது எவ்ளோ பெரிய படம். செப்டம்பர் 5ம் தேதி மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த படம் பார்க்க வருவார்கள் என தயாரிபாளர் கூறினார். நானும் ஓகே என சொல்லிவிட்டேன்.”
“சிவா அண்ணா படம் கண்டிப்பாக ஜெயிச்சிடும். அண்ணன் வேற லெவல். முதன் முதலில் வரோம் எங்க படமும் ஜெயிக்கனும்” என பாலா கூறி இருக்கிறார்.
View this post on Instagram