காந்தி கண்ணாடி
ஷெரீஃப் இயக்கத்தில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாக வெளியான திரைப்படம் காந்தி கண்ணாடி.
அவருடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எமோஷ்னல் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கண் கலங்க வைத்துவிட்டது.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படத்திற்கு பாலா ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.
முதல் நாளில் மட்டுமே இப்படம் மொத்தமாக ரூ. 35 லட்சம் வசூலித்தது.

பாக்ஸ் ஆபிஸ்
படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் பெரிய அளவில் இல்லை. இதுவரை படம் மொத்தமாக ரூ. 3.5 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் அதிக பட்சமாக படம் ரூ. 5 கோடி வரை வசூலிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

