படையப்பா
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. அதில் சிவாஜி கணேசன் – ரஜினிகாந்த் – ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த திரைப்படம் படையப்பா.
வசூலில் மாபெரும் சாதனை படைத்த இப்படம் இன்று வரை ரசிகர்ளின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. டிவியில் ஒளிபரப்பானாலும் இப்படத்தை அடிக்கொள்ள முடியாது.
குட் பேட் அக்லி படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ரஜினியின் மாஸ் ஒரு பக்கம், அதை மிஞ்சும் அளவிற்கு ரம்யா கிருஷ்ணனின் வெறித்தனமான நடிப்பு மறுபக்கம், இதற்கிடையில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பான இசை என படம் வேற லெவலில் இருக்கும்.
கே.எஸ். ரவிக்குமார் பேட்டி
இந்த நிலையில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் படையப்பா படத்தின் சமயத்தில் நடந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இதில் “படையப்பா படம் எடுத்து முடிந்ததும் ரஜினி சாரை படம் பார்க்க அழைத்தேன். அப்போது ரஜினி சாரின் நண்பர்களும் வந்தார்கள். படம் |முடிந்தப் பிறகு அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் போய், இரவு உணவை சாப்பிடலாம் என்று ரஜினி சார் சொன்னார்.
ஆனால், படம் முடிந்த பிறகு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார்.
அதனால் ரஜினி சாருக்கு படம் பிடிக்கவில்லையோ என்று நினைத்தேன். ஆனால், மறுநாள் என்னை அழைத்து, எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் இருந்தால் என் நண்பர்கள் நேர்மையாக படத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள் என சென்று விட்டேன் என்று கூறினார். அப்புறம் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது” என கே.எஸ். ரவிக்குமார் பேசியுள்ளார்.