அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுகூட தயாராக இருப்பவர்கள் குடு பெரமுன தரப்பினரே என நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.
“இது ஜனாதிபதிக்கான அரசாங்கம் இல்லை. அது அமைச்சர்களுக்கான ஆட்சி இல்லை.
அரசியல் பிரசாரம்
இது மக்களுக்கான ஆட்சி.
எதிர்கட்சிகள் தமது அரசாங்கத்துக்கு எதிரான ஒன்று கூடுகின்றனர்.

அவர்கள் எவ்வாறு பிரச்சினைகளை உறுவாக்க முயற்சித்தாலும் எம்மை எதுவும் செய்ய முடியாது.
எமக்கு எதிராக ஒன்று திரள எதிர்க்கட்சிகள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் யார் ஒன்றுகூடவுள்ளனர் என்பது இதுவரையில் தெளிவாகவில்லை.
அங்கு ஒன்று கூடுவதாக குடு பெரமுன தரப்பே தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்றால் இவ்வாறு எங்கும் அரசியல் பிரசாரம் செய்யமுடியாதல்லவா” என கூறியுள்ளார்.

