குடும்பஸ்தன்
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்து மாபெரும் வெற்றியாக குடும்பஸ்தன் திரைப்படம் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் முக்கிய ஹீரோக்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மேலும் சான்வி மேக்னா என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இப்படத்தை இயக்கியிருந்தார்.
காஞ்சனா 4 படத்தில் இணைந்த முக்கிய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் அப்டேட்
வசூல் விவரம்
மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விடாமுயற்சி போன்ற முன்னணி நடிகரின் பிரம்மாண்ட படம் வெளிவந்த நிலையிலும், குடும்பஸ்தன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.