குருநாகல் (Kurunegala) பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போதைப்பொருள் குற்றவாளியொருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் – மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் (S.I) ஒருவரும் தொரடியாவ பொலிஸ் நிலைய சார்ஜண்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் இருந்தபடி இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் நபருடன் உரையாடுவதற்காக குறித்த பொலிஸார் குற்றவாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த உதவியதாக கூறப்பட்டுள்ளது.
கொலை பின்னணி: 33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய, மேற்குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பொலிஸாரின் பிடியில் இருந்து போதைப் பொருள் வர்த்தகர் தப்பியோட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |