முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறைக்குள் நடந்த கொடுமைகள்…! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

“நான் மதியம் 3:30 மணியளவில் வேலையிலிருந்து வீடு திரும்பி, விடுதிக்கு வந்தேன். அதன் பிறகு, நான் ருவன்வெளி மஹா சேயவிற்கு வழிபடச் சென்றேன்.

மாலை சுமார் 6:30 மணியளவில் நான் விடுதிக்கு திரும்பினேன். நான் என் விடுதி அறைக்குள் நுழையப் போகும் போது, ​​யாரோ என் பின்னால் வருவது போல் உணர்ந்தேன். ​​

நடந்த கொடுமைகள்

என் அறைக்கு எதிரே உள்ள அறையின் வாசலில் இருந்த ஒருவர் என் கழுத்தில் கத்தியை வைத்து கதவைத் திறக்கச் சொன்னார். நான் கதவைத் திறந்தவுடன், அவர் என்னைத் தள்ளிவிட்டு, ஒரு டி-ஷர்ட்டால் என் வாயை மூடினார்.

அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள் | Anuradhapura Doctor Revelead The Rape Incident

பின்னர் என் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை போட்டு, எல்லா இடங்களிலும் பார்த்தார். பிறகு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு குளியலறை விளக்கை மட்டும் போட்டார்.

நான் இராணுவத்திலிருந்து தப்பி வந்துவிட்டேன். பொலிஸார் என்னைத் தேடுகிறார்கள். சிறிது நேரம் மறைந்திருக்க அனுமதிக்குமாறு கேட்டார். இங்கேயே இருக்க விடுங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டேன் என்றார். ஆனால் கத்தினால் தொண்டையை அறுத்துவிடுவேன் என கூறினார்.

அவர் என் அருகில் அமர்ந்து, என கைகளை முன்னோக்கி நீட்டுமாறு கூறி கட்டி வைத்தார். வாயை ஒரு துணியால் மூடினார். எனது கையடக்க தொலைபேசியை வழங்குமாறு கேட்டார்.

என் தொலைபேசியை எடுத்து, எனக்காக ஒரு இந்தி பாடலை போடுமாறு கேட்டார். நான் பாடலை போடாமல் அவருடன் போராடினேன். எனது கையில் கத்தி வெட்டுக்காயம் ஏற்பட்டது.

கொலை மிரட்டல்

அவர் என்னைக் கொன்றுவிடுவார் என பயந்து அவர் சொன்னதை நான் செய்ய ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள் | Anuradhapura Doctor Revelead The Rape Incident

அவர் அனைத்தை முடித்துவிட்டு எனது தொலைபேசியிலேயே என்னை புகைப்படம் எடுத்தாார். நான் கைடயக்க தொலைபேசியை கொண்டு செல்கிறேன். நடந்த விடயங்களை வெளியே கூறினால் உங்களுக்கு தான் பிரச்சினை மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

என் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. நான் அவற்றை அவிழ்த்த போது, ​​அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. ஒரு ஜன்னல் திறந்திருந்தது.

அசௌகரியத்தைத் தாங்க முடியவில்லை, அதனால் நான் குளித்தேன், பின்னர் விரைவாக மருத்துவரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அவரும் தனது தந்தையிடம் தொலைபேசியில் கூறினார்.

பின்னர் சம்மாந்துறை மருத்துவமனையில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் கூறினார்.” இதற்கிடையில், சந்தேக நபரைத் தேடி 5 பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன.

கல்னேவ பகுதியில் நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் சிறப்பு மருத்துவரை பாலியல் சீண்டல் செய்த 34 வயது சந்தேக நபரை விசாரணைக்காக 48 மணி நேரம் தடுத்து வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு

இதேவேளை, சந்தேக நபர் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அறைக்குள் நடந்த கொடுமைகள்...! பாலியல் சீண்டல் செய்யப்பட்ட பெண் வைத்தியர் வெளியிட்ட தகவல்கள் | Anuradhapura Doctor Revelead The Rape Incident

இந்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபரின் மூத்த சகோதரியும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 17 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த திங்கட்கிழமை அனுராதபுரம் போதனா மருத்துவமனை வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ விடுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து 32 வயதுடைய பெண் பயிற்சி மருத்துவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார்.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு அவரை மிரட்டி பாலியல் சீண்டல் செய்துள்ளார்.. பின்னர் சந்தேக நபர் மருத்துவரின் கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றார். தொலைபேசி சிக்னல்களின் அடிப்படையில் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.