தமிழில் கடந்த சில வருடங்களில் OTT வளர்ச்சியில் பல வெல் சீரிஸுகள் வரிசை கட்டி நிற்கிறது, இதில் சுழல், வதந்தி, சட்னி சாம்பார் போன்ற பல சீரிஸுகள் ஹிட் அடிக்க அந்த வரிசையில் விதார்த், பசுபதி நஇருக்காது. செல்வமணி முனியப்பன் இயக்கத்தில் வெளிவந்துள்ள குற்றம் புரிந்தவன் எப்படி பார்ப்போம்.

கதைக்களம்
பசுபதி அரசு மருத்துவமனையில் மெடிக்கலில் வேலை பார்ப்பவர். இதன் காரணமாகவே அந்த ஊரில் யாருக்கு என்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் இவரிடம் மருந்து கேட்பார்கள், இவரும் அதை கொடுத்து உதவுவார்.
பசுபதி தம்பதியருக்கு இருந்த மகள் குழந்தையை பெற்று விட்டு இறக்கிறார், மருமகனும் வேறு கல்யாணம் செய்துவிட்டு செல்கிறார், பிறந்த குழந்தைக்கு மூளையில் செல்லு நரம்பில் ஏதோ பாதிப்பு, அதற்கு சிகிச்சைகாக ரிட்டெயர்மெண்ட் பணத்தை பசுபதி நம்பி இருக்கிறார்.

இந்த நேரத்தில் தன் பக்கத்து வீட்டு எஸ்தர் மகள் மெர்சி யாரோ ஒருவன் தவறாக நடக்க முயற்சிக்க, படுத்த படுக்கையாக இருக்கிறார்.
இதை பார்த்த மெர்சி அப்பா பசுபதியிடம் தூக்கி செல்கிறார், பசுபதியும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது, இதெல்லாம் டாக்டர் தான் பார்க்க வேண்டும் என சொல்ல, அவசரத்திற்காக முதலுதவி செய்யும் போது மெர்சி இறக்கிறார்.
அடுத்த சில நிமிடங்கள்ளிலேயே மெர்சி அப்பா மாடியிலிருந்து விழுந்து இறக்க, இதற்கு மேல் என்ன நடந்தது என போலிஸில் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என பசுபதி மெர்சி உடலை ப்ரிட்ஜ்-ல் மறைக்க, மெர்சியை யார் இப்படி செய்தது, இதற்கு முன்பும் 2 குழந்தைகள் தொலைந்து போக, யார் இதற்கு காரணம் என்ற தேடலே இந்த குற்றம் புரிந்தவன்.

ஜாக்கி ஜான் சம்பவம் The Shadow’s Edge திரை விமர்சனம்
சீரிஸ் பற்றிய அலசல்
பசுபதி தன் பேரன் படுத்த படுக்கையாக இருக்கிறான், வீட்டிலேயே ஒரு குழந்தையின் சடலம், ஊரே தேடுகிறது, போலிஸ் அடிக்கடி வருகிறது, பேரன் ஆப்ரேஷனுக்கு பணம் வேண்டும் என்ற பல போராட்டங்களை தன் முகத்தில் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு இடத்திலும் இவரின் பெர்ப்பாமன்ஸ் பின்னி பெடல் தான்.
அதே போல் போலிஸ் மற்றும் அரசியல்வாதி சிஸ்டத்தில் மாட்டிக்கொண்டு, போலிஸ் வேலை செய்ய முடியாமல், உயர் அதிகாரிக்கு கார் ட்ரைவராகவும், அவர்கள் வீட்டில் எடுபுடியாகவும், தன் சொந்த மகள் முன்பே அவமானப்படுவது, தன் மகளின் தோழியை தொலைந்து போக அதை கண்டுப்பிட்க்க முடியாமல் போனாலும் மகளை தேற்றுவது, ஒரு கட்டத்தில் மெர்சி கேஸை யாருக்கும் தெரியாமல் பசுபதியை நோட்டமிட்டு கண்டுப்பிடிப்பது என விதார்த் வழக்கம் போல் சிறப்பு தான், இவருக்கெல்லாம் இன்னும் நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.

சீரிஸ் ஆரம்பித்து முதல் 4 எபிசோடுகள் மிக பொறுமையாக தான் செல்கிறது, சுவாரஸ்யமான தேடல் களம் என்றாலும் பசுபதி, விதார்ந்தின் கவலைகளை மட்டுமே முதன்மைபடுத்தி காட்டியது கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.
ஆனால், அதன் பிறகு இந்த மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ, பசுபதி, விதார்த் தேடி செல்லும் இடங்களில், சந்தேகத்தின் பெயரில் புடிக்கும் ஆட்கள், கடைசியில் அவர்கள் இல்லை என ஒரு திருப்பம், அதை தொடர்ந்து கிளைமேக்ஸில் யார் இதை செய்தார் என்ற டுவிஸ்ட், மெர்சி உடல் என்ன ஆனது என்ற டுவிஸ்ட் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது.
டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு, இசை ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் டீசண்ட் ரகம்.
க்ளாப்ஸ்
பசுபதி, விதார்த் போன்ற அனைவரின் நடிப்பும்.
5,6,7 எபிசோட்ஸ்
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்
பல்ப்ஸ்
ப்ரிட்ஜ்-ல் சடலம் இருக்க, பசுபதி தவிற யாருமே அந்த ப்ரிட்ஜ்-யை திறக்க கூட மாட்டார்களா போன்ற லாஜிக் மிஸ்டேக்.
முதல் 3 எபிசோட் மிக மெதுவாக நகரும் கதை.
மொத்ததில் குற்றம் புரிந்தவன் மெதுவாக செல்ப் எடுத்து போக போக வேகமாக பயணிக்கும் ஒரு சுவாரஸ்ய சீரிஸ்.


