ரியல் மட்ரிட் அணியுடன் (Real Madrid) இணைவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், கனவு இறுதியில் நனவாகிவிட்டது எனவும் பிரான்ஸ் காற்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கைலியின் எம்பாபே (Kylian Mbappé) தெரிவித்துள்ளார்.
ரியல் மட்ரிட் அணிக்காக உத்தியோகபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரியல் மட்ரிட் அணி
மேலும் கருத்து தெரிவித்த அவர், எனது கனவு நனவாகிவிட்டது. ரியல் மட்ரிட் அணிக்காக ஐந்து வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன் மேலும் எனக்கு 9 ஆம் இலக்க சட்டை வழங்கப்பட்டுள்ளது.
Madridistas,
Hoy fue un día inolvidable para mi y mi familia. Realizo mi sueño de niño.
Muchas emociones !!!!!!
Gracias por el cariño y el amor desde muchos años. Muy feliz y orgulloso de ser parte de la grande familia @realmadrid
Tengo ganas de empezar a jugar por el mejor… pic.twitter.com/fDoZ7WJeeW— Kylian Mbappé (@KMbappe) July 16, 2024
நான் பல ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன்.
இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் முக்கியமனானதொரு தருணம் என கைலியின் எம்பாபே குறிப்பிட்டுள்ளார்

