முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தங்க புதையல் : எந்த நாட்டில் தெரியுமா !

பாகிஸ்தானின் (Pakistan) பஞ்சாப் மாகாணத்தில் சிந்து நதி படுகையில் சுமார் 42 லட்சம் சவரன் தங்கம் புதைந்து கிடப்பதாக அந்நாட்டு முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளமை தற்போது சர்வதேச நாடுகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில், சிந்து நதியில் இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் புதைந்து கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டெக்டானிக் பிளேட்டுகள் மோதி மலைகள் உருவாகும் போது, அரிப்பு காரணமாக தங்கத் துகள்கள் உருவாகி இருக்கலாம் என்றும் அவை சிந்து நதியின் வேகத்தில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடத்திய ஆராய்ச்சி 

குறித்த தங்கம், சிந்து மற்றும் காபூல் ஆறுகள் இணையும் இடத்தில் பல நூறு ஆண்டுகளாக குவிந்து புதைந்து போயி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தங்க புதையல் : எந்த நாட்டில் தெரியுமா ! | Lakh Sovereign Gold Treasure Found Pakistan

அத்தோடு, பாகிஸ்தானின் அட்டோக்கிலிருந்து தர்பேலா மற்றும் மியான்வாலி வரை 32 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த தங்க புதையல்கள் பரவி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி பகுதிக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் குளிர்காலத்தில் நதியில் தண்ணீர் மட்டம் குறைவாக இருக்கும் என்பதால் ஏராளமானோர் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டி தங்கத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாய்ப்பு

இது சட்டவிரோதம் என்பதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் தங்கம் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக கூறப்பட்டாலும், கனிம வளத்துறையினர் அதில் கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மணல் மற்றும் ஜிங்க் சுரங்கம் அமைப்பதற்கான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் இதனால் தங்கம் குறித்த ஆய்வுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்பட்டு வந்ததுடன் 127 இடங்களில் மாதிரிகள் எடுத்து பாகிஸ்தானின் புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆராய்ச்சி மூலம் தங்கம் புதையல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாபின் முன்னாள் சுரங்க அமைச்சர் இப்ராஹிம் ஹசன் முராத் (Ibrahim Hassan Murad) தெரிவித்துள்ளார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தங்க புதையல் : எந்த நாட்டில் தெரியுமா ! | Lakh Sovereign Gold Treasure Found Pakistan

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு புதிய வாய்ப்புகளுக்கான களத்தை இது அமைத்துத் தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சிக்கலில் சிக்கி பாகிஸ்தான் தவித்து வரும் நிலையில் தங்கம் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அந்நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.