திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாமென கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(28) இடம்பெற்றது.
1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட மறைந்த மர்ஹூம் ஏ எல் அப்துல் மஜீத் அவர்களால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.
யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது
துறைமுக அதிகார சபை
1984 இல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவர்களால் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
ஆனால் அம் மக்களுக்கு இது வரை காணி உரித்துப் பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் துறை முக அதிகார சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறது சுமார் 788 விவசாய நிலங்களும் காணப்படுகிறது.
200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட ஜூவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.
சுதந்திரக்கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் யார்..! மல்வத்துபீடத்திற்கு எழுந்த சந்தேகம்
அதிகார சபையினர்
துறைமுக அதிகார சபையினர் எங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்ப்பதுடன் இதனை அரசாங்கம் நிறுத்தி அதிபர் எங்கள் காணிகளுக்கான உரித்து படிவங்களை வழங்க வேண்டும் விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
விற்காதே விற்காதே காணிகளை விற்காதே,விவசாய நிலங்களை மீட்டுத் தா ,நாட்டின் முதுகெழும்பு விவசாயம், துறை முக அதிகார சபையே விவசாய காணிகளை அபகரிக்காதே, 1972 இல் இருந்து விவசாய அநாதைகளாக நிர்க்கதியாக இருக்கிறோம் காணி உரித்து வடிவங்களை வழங்கு போன்ற வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு குறித்த முத்து நகர் விவசாய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதில் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |